பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் ஏற்க மறுத்தால் உடனடியாக மேலதிகாரியுடனோ அல்லது தன்னுடனோ தொடர்புகொண்டால் அதற்கான தீர்வு கிடைக்கும் என யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. விமலசேன தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பொது மக்கள் செய்யும் முறைப்பாடுகளை பதிவு செய்ய பொலிஸார் மறுத்த வருவதாக ஊடகவியலாளர் தெரிவிக்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் குடாநாட்டில் மட்டுமல்ல எந்த பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாட்டை ஏற்க முடியாது என பொலிஸாரால் சொல்ல முடியாது என்பதுடன் உங்கள் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் உள்ள முறைப்பாட்டுப் பிரிவில் முறையிட முடியும் அவர்கள் அதை மறுக்க முடியாது எனினும் அவ்வாறு மறுக்கப்பட்டால் உடனடியாக எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவோ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறையிடலாம் அல்லது என்னிடம் முறையிடுங்கள்.
ஏன் எனில் எந்தவொரு பொதுமகனின் முறைப்பாட்டையும் ஏற்க முடியாது எனக் கூறமுடியாது என்பதுடன் சாட்சிகள் குறித்து பொலிஸார் விசாரிப்பது அவர்கள் இலகுவாக குற்றவாளிகளை இனம்கண்டு கைது செய்ய முடியும் என்பதற்காகத்தான் ஆனால் சாட்சி இல்லை என்பதற்காக முறைப்பாட்டை ஏற்க முடியாது என்று பொலிஸார் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.
எனவே இதனைப் பொதுமக்கள் அறிந்து கொண்டு செயற்பட்டால் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்டார்.