வெல்லம்பிட்டி நாகஹமுல்ல பிரதேசத்தில் இன்று(08.02.2014) மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் 30 சரையான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் தீயணைப்புப் படை, பொலிஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயை அனைத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இத்தீ எவ்வாறு மூண்டது என்பது குறித்து விசாரணைகள் தற்போது நடைபெறுவருவதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.