ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளரும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளருமான ஹோலியங் சூ இரண்டு நாள் விஜத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.
இவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர்கோட்டாபாய ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் பீ.வி. ஜயசுந்தர மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார்.