வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வொன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் அறிக்கையொன்றை வேண்டியிருப்பதாகவும் சிங்கள தேசிய ஊடகமொன்று தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அரசியல் அமைப்புக்கு முரணான செயற்பாடுகள், நாட்டின் பாதுகாப்பை சர்வதேசத்திடம் கேள்விக் குறியாக்குதல், சர்வதேச இராணுவத்துடன் இணைந்து செயற்பட திட்டமிடல் போன்ற நாட்டுக்கு எதிரான வடமாகாணசபையின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வுசெய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.