அல்ஜீரியா நாட்டில் ராணுவத்தின் குடும்பத்தினர்களை சுமந்து சென்ற விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை இன்று விபத்துக்கு உள்ளனது. அல்ஜீரிய நாட்டு அரசுத்துறை வானொலி தெரிவித்த தகவல்படி, அவர்களில் 99 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் என இதில் 123 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் தெற்கு அல்ஜீரியாவில் உள்ள டாமன்ராசெட் பகுதி வெர்க்லா விமான நிலையத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் உள்ள செடிப் நோக்கிச் சென்றுகொண்டிருந்து.
அந்தப் பகுதியில் வீசிய பனிப்புயலால் விமானம் திசை தெரியாமல் கீழே விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.