![](http://1.bp.blogspot.com/-IxJJrSsuors/Uvp6P3rBp7I/AAAAAAAAmQg/FsMbZT1-060/s320/kp.bmp)
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான சதிகள் மேற்கொள்ளப்படுகையில்,இச்சதிகளை முறியடிக்க தேசப்பற்றுள்ளோர் முழுமூச்சாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றபோது, இத்தனை அழிவுகளுக்கும் மூலகாரணமான ஆயுதத்தை புலிகளுக்கு வாரி வழங்கிக்கொண்டிருந்த குமரன் பத்மநாதன் கிளிநொச்சியில் உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பதாக அவ்வூடகங்கள் சாடுகின்றன.
அத்துடன் கே.பி யின் தாய்லாந்து மனைவியும் கே.பி யுடன் கிளிநொச்சியில் வசித்து வருவதாகவும் அவ்வூடகங்கள் தமது சீற்றத்தை வெளியிட்டுள்ளது.
கே.பி யால் வழங்கப்பட்ட ஆயுதங்களால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிந்தது யாவரும் அறிந்தது. இந்த அழிவால் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் அநாதைகளாயினர். இன்று இச்சிறுவர்களுக்கு தேசியத் தலைவராக நிற்கின்றார் கே.பி. அவ்வாறாயின் அநாதைச்சிறுவர்களுக்கு தேசியத்தலைவி தாய்லாந்து பெண். தேசியத்தலைவி சிறுவர்களுடன் நின்று எப்போது படங்கள் வெளியிடுவாரோ?