Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

மகனை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளாராக்கினார் மாவை சேனாதிராஜா.

$
0
0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கான நிர்வாகத் தெரிவு நேற்று முன்தின் 29.12.2018 அன்று கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மிகக்குறைந்த இளைஞர்களுடன் மாவை சேனாதிராஜாவின் பிரசன்னத்தில் நிர்வாக தேர்வு நடைபெற்றபோது இளைஞர் அணிக்கான செயலாளராக மாவையின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக கந்தசாமி பிருந்தாபனும், பொருளாளராக சாவகச்சேரி மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான சுதர்சனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் தெரிவு செய்யப்பட்டமைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ம் ஆண்டு இந்தியாவில் குடியேறிய மாவையின் குடும்பத்தினர் 2015ம் ஆண்டுவரை இலங்கைப் பக்கம் வரவே இல்லை என்றும் மாவையின் புதல்வர் புதல்வியர் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்காக இந்தியாவில் வழங்கப்பட்ட கல்லூரிச் சலுகைகளை பெற்று முற்று முழுதான உயர் கல்வியை பெற்று சுகபோக வாழ்வு வாழ்தவர்கள் என்றும் தெரிவு நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர்களால் பலத்த எதிர்ப்பு காட்டப்பட்டபோதும் தமிழரசுக் கட்சியிலுள்ள மாவையின் எடுபிடிகளின் ஒத்தாசையுடன் மாவையின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் தனது குழந்தைகளை நாட்டுக்கு அழைத்துவந்த மாவை மகனுக்கு அரசியல் தளம் அமைத்துக்கொடுத்துள்ளதுடன் மகளுக்கு மைத்திரிபாலவின் சிபார்சில் இலங்கை மத்திய வங்கியில் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!